அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 31வது நினைவுதினம் அனுஸ்டிப்பு-(படங்கள் இணைப்பு)-

sfdfdf (9)இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2016) காலை 7மணியளவில் திரு. திருஞானசம்பந்தர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. 31வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், வட மாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் க.சிவநேசன், பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பெருமளவு பொதுமக்களும் கலந்து சிற்ப்பித்திருந்தனர். நினைவுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், முன்னைநாள் ஐ.நா சபையின் அதிகாரியும், 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுக் குழுவின் செயலாளரும், தமிழ் தேசியவாதியுமான திரு. சச்சிதானந்தம் வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு. தவராஜா, பாராளுமன்ற உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் உரையாற்றினார்கள். 

DSC04598 DSC04625 DSC04626 DSC04628 sfdfdf (1) sfdfdf (2) sfdfdf (3) sfdfdf (4) sfdfdf (5) sfdfdf (6) sfdfdf (7) sfdfdf (8) sfdfdf (9) sfdfdf (10) sfdfdf (11) sfdfdf (12) sfdfdf (13) sfdfdf (14) sfdfdf (15) sfdfdf (16)

sfdfdf (27) sfdfdf (28) sfdfdf (29) sfdfdf (30) sfdfdf (31) sfdfdf (32)