பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களால் இடைக்காடு புதிய கரப்பந்தாட்ட மைதானம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)-

IMG_4601இடைக்காடு நம்பிக்கை நிதியத்தினால் யாழ். வடமராட்சி இடைக்காடு ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்காக உருவாக்கப்பட்ட புதிய கரப்பந்தாட்ட மைதானம் 30.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு புதிய கரப்பந்தாட்ட மைதானத்தினை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. ஜயசிங்க, கோட்டக்கல்வி அதிகாரி திரு. கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இடைக்காட்டு நம்பிக்கை நிதியத்தின் தலைவர் அரசகேசரி(அதிபர்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். IMG_4606 IMG_4609 IMG_4617 IMG_4624 IMG_4628