கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி-(படங்கள் இணைப்பு)-
அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்றுக்காலை (02.09.2016) யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முற்பகல் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கல்லூரியின் பீடாதிபதி அமிர்தலிங்கம், முன்னைநாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஒருவர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தார்கள். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்கள்.