Header image alt text

Moolai1யாழ் வலிகாமம் மேற்கு மூளாய், மனிதவள முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி நேற்று (04.09.2016) ஞாயிற்றுக்கிழமை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், நிகழ்வின் கௌரவ விருந்தினராக வலிமேற்கு முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் சசி அவர்களும்ம் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களுடன், சிறார்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.  Read more

Iththaavil1கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இத்தாவில் கிராமத்திற்கு (03.09.2016) சனிக்கிழமை விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அப்பகுதி மக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது அம்மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்ததோடு, தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் ஊர்ப் பெரியோர்கள், மாதர் சங்கங்கள் மற்றும் முன்பள்ளிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அன்றையதினம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேம்பொடுகேணி கிராமத்திற்கு விஜயம் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், பிரதேச மாதர் சங்கங்கள் மற்றும் முன்பள்ளிகளின் முக்கியஸ்தர்களையும், ஊர்ப் பெரியோர்களையும் சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்ததோடு, தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விளக்கியுள்ளார். Read more

சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த நீதிபதி இளஞ்செழியன் மறுப்பு-

ilanchliyanசட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2ம் திகதி அந்த சட்டத்தரணிக்கு எதிராக மல்லாகம் நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்தப் பிடியாணையை இடைநிறுத்தி வைப்பதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, சந்தேகநபரான சட்டத்தரணி ஊடாக யாழ் மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அது தொடர்பாக செய்யப்பட்ட சமர்ப்பணத்தை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு முதலில் பணிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மலேசியாவிற்கான இலங்கைத் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம்-

sssssssssssமலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர்மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு, மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வெளிவிவகார செயலாளர் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது. மாநாடு ஒன்றுக்காக மலேஷியா சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மலேஷியாவிலுள்ள தமிழ் டயஸ்போரா குழுவினருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றுகாலை அரை மணிநேரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, விமான நிலைய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மலேஷியாவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்க சென்ற குழுவினரே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள மலேஷியாவுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்த நாட்டு விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இலங்கைத் தூதுவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க… Read more