சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த நீதிபதி இளஞ்செழியன் மறுப்பு-

ilanchliyanசட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2ம் திகதி அந்த சட்டத்தரணிக்கு எதிராக மல்லாகம் நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்தப் பிடியாணையை இடைநிறுத்தி வைப்பதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, சந்தேகநபரான சட்டத்தரணி ஊடாக யாழ் மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அது தொடர்பாக செய்யப்பட்ட சமர்ப்பணத்தை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு முதலில் பணிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மலேசியாவிற்கான இலங்கைத் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம்-

sssssssssssமலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர்மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு, மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வெளிவிவகார செயலாளர் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது. மாநாடு ஒன்றுக்காக மலேஷியா சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மலேஷியாவிலுள்ள தமிழ் டயஸ்போரா குழுவினருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றுகாலை அரை மணிநேரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, விமான நிலைய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மலேஷியாவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்க சென்ற குழுவினரே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள மலேஷியாவுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்த நாட்டு விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இலங்கைத் தூதுவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க…இலங்கை இளைஞர்களின் இறுதிக் கிரியைகளில் 3000ற்கும் அதிகமானோர் பங்கேற்பு-

sssssssss (2)பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றன. உயிரிழந்த ஐவரில் நால்வர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதுடன், மற்றைய இளைஞன் லண்டனில் பிறந்த இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவராவார். 18 வயதான கெனுஜன் சத்தியநாதன், 22 வயதான கோபிகாந்தன் சத்தியநாதன் மற்றும் நிதர்ஷன் ரவி, 23 வயதான இந்துஷன் சிறீஸ்கந்தராஜா, 27 வயதான குருஷாந்த் சிறீதவராஜா ஆகியோரே உயிரிழந்தனர். கடந்த மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த, நண்பர்களான ஐந்து இளைஞர்களின் இறுதிக் கிரியைகள் சமய முறைப்படி, வின்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றன. இறுதிக்கிரியைகளுக்காக, இணையத்தளமொன்றினால் 9000 பவுண்ட்ஸ_க்கும் அதிகமான நிதி சேகரிக்கப்பட்டது. இறுதிக்கிரியைகளில் 3000ற்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. தென்கிழக்கு இலண்டனிலிருந்து, கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரைக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர்களே உயிரிழந்தனர். இதனையடுத்து, உயிர்பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அசமந்தப் போக்கு தொடர்பில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமற் போயிருந்த சிறுவர்கள் எட்டு நாட்களின் பின்பு மீட்பு-

rrrrrrrrமாங்குளம், கற்குவாரி கிராமத்திலிருந்து, ஆகஸ்ட் 27ஆம் திகதி காணாமற்போன 2 சிறுவர்களையும் நுவரெலியாவில் வைத்து கடந்த 3ஆம் திகதி மீட்டதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளம் மகா வித்தியாலயத்தில், தரம் 8இல் கல்வி பயிலும் சிவானந்தன் இராமகிருஷ்ணன் (வயது 16), கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகுமார் (வயது 15) ஆகிய இரு சிறுவர்களும், மாங்குளத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவருவதாகக் கூறிச் சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்கள் வீடு திரும்பாதையடுத்து, அவர்களைத் தேடிய பெற்றோர் அதன் பின்னர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டுக்கிணங்க தேடுதல் நடத்திய பொலிஸார், எட்டு நாட்களின் பின்னர் நுவரொலியாவில் வைத்து சிறுவர்களை மீட்டுள்ளனர். சிறுவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பெற்றோரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். இவ்விரு சிறுவர்களும், மலையகத்தைப் பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றதாக, விசாரணைகளின் போது பொலிஸாரிடம் தெரிவித்ததாக, பொலிஸார் கூறினர்.

திருகோணமலையில் வர்த்தகர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை-

ghhhhhதிருகோணமலை பகுதியில் அரச வங்கியொன்றுக்கு சென்றிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல் நேற்றையதினம் மாலைமுதல் போயுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பண்டாரகம பகுதியில் இருந்து மேலும் நால்வருடன் குறித்த வங்கிக்கு சென்றிருந்த மொஹமட் நஸ்ரின் எனும் 35வயது நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் பகுதி ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற அவர், ஏல விற்பனை ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் பெற்ற சுமார் ஒரு கோடி ரூபா வரையான பணம் அவர் வசம் இருந்ததாக பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர், தண்ணீர் குடிப்பதற்காக வங்கிக்கு வெளியே சென்றுள்ளார். எனினும், சென்றவர் திரும்பி வரவில்லை எனவும் அவரிடம் 20 இலட்சம் ரூபாய் பணம் இருந்ததாகவும் அவருடன் வந்த நபர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவை சோதனை செய்த திருகோமணலை தலைமையக பொலிஸார், இது பற்றிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முழங்காவில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை-

sfdfdffffffffகிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள 2 ஏக்கர் அரச காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கிராம சேவையாளரூடாக அடையாளப்படுத்தப்படும் காணி இன்று பொறுப்பேற்கப்படவுள்ளதாக பூநகரி பிரதேச செயலாளர் சி.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பொன்னாவெளி பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த 4.5 ஏக்கர் காணியை பொறுப்பேற்றுள்ளதாகவும் பிரதேச செயலாளர் கூறியுள்ளார். அதற்கமைய பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த 6.5 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரிடமிருந்து மீள கையேற்கும் காணி, அரச காணி எனவும், அவற்றில் தனியாருக்கு சொந்தமான காணிகள் காணப்படவில்லை எனவும் பூநகரி பிரதேச செயலாளர் சி.கிருஸ்னேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பரவிபாஞ்சான் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டம்-

paravi panchanஇராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தும், கிளிநொச்சி பரவிபாஞ்சான் கிராம மக்களுக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை. பரவிபாஞ்சான் மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், ஆறாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.

தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கப்படும் வாக்குறுகள் தொடர்ந்தும் பொய்யாகிப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.