தம்மை யாழ். சிறைக்கு மாற்றுமாறு வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் கோரிக்கை-

sdfsddபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும், தம்மை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் 12பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது 5ஆவது சந்தேகநபர், நீதவானிடம் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என நீதவான் குறிப்பிட்டார். அத்துடன், வித்தியா கொலை தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை தமக்கு வாசித்துக் காட்டவேண்டுமென மூன்றாவது சந்தேகநபரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய நீதவான், வழக்கு தொடர்பான அனைத்து விடயங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறித்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு அதுவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். புதிய பொலிஸ் நிலையம் ஜனாதிபதி திறந்துவைக்க ஏற்பாடு-

jaffna new police stationயாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையம் வருகின்ற 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளார். தற்போது தனியார் ஓருவருக்கு சொந்தமான கட்டடத்தொகுதியிலேயே யாழ் பொலிஸ் நிலையம் இயங்கிவருகின்றது. புதிய பொலிஸ் நிலையம் யாழ் பிரதான வீதியில் யாழ் மாநகர சபை மைதானத்தின் அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நான்குமாடி கட்டடம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதியுதவியில் 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 4 மாடிக்கட்டடத்தின் கட்டு மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது குறித்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக் கட்டடம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இக் கட்டடத்தில் உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள அலுவலகங்களும் ஏனைய அமைச்சுக்களின் கீழ் உள்ள அலுவலகங்களும் அமைந்துள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை உடைப்பையடுத்து உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல்-

courts (2)வட மாகாணத்தில், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட புத்தர் சிலைகளுக்குப் பதிலாக, புதிய புத்தர் சிலைகளை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ய உத்தரவிடுமாறு, புத்தசாசன அமைச்சருக்கு உத்தரவிடுமாறும், மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், வடக்கிலுள்ள புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதால், அரசியலமைப்புத் திருத்தத்தில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருந்த முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு என்பன மீறப்பட்டுள்ள என்றும் இதன்மூலம், பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளை வாசிக்க…..
தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு-

thaya master (1)தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இரண்டாவது தடவையாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு கொள்ளப்பட்டபோது, இந்த நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான அனைத்து வழக்குகளினதும் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவருடைய பணிப்புரைக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தக் கோவைகள் இன்னும் அங்கிருந்து திரும்பி வராத காரணத்தினால் இந்த வழக்கை வேறு ஒரு திகதிக்கு ஒத்தி வைக்குமாறு அரச சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின்போது, சாதாரண மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை தொடர்பில், கொழும்பு நீதவான் முன்னிலையில் தயா மாஸ்டரால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தயா மாஸ்டர் சார்பில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்திருந்தை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிற்போடப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பல்ல-மகிந்த தேசப்பிரிய-

mahinda desapriya (3)உள்ளூராட்சி தேர்தலுக்கான எல்லை நிர்ணய பணிகள் இம்மாதம் நிறைவடைவுள்ளன. இருந்தபோதிலும் தேர்தல் பிற்போடப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பல்ல. எங்கள்மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம். தேர்தலை நடத்துவதற்கு எமக்கு தற்போதைக்கு அதிகாரம் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எல்லை நிர்ணய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்ற அனுமதி கிடைத்ததன் பின்னரே தேர்தலை நடத்துவதற்கு எமக்கு அதிகாரம் கிடைக்கும். எனினும் அந்த கால தாமதத்திற்கு அரசியல் ரீதியான காரணங்களை என்னால் கூறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்-

hyyyyyyyமலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கியமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டடதோடு, சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.