A2வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் கனடாக்கிளையைச் சேர்ந்த திரு.தங்கராசா ரூபன் அவர்களின் நிதி அனுசரனையுடன் சில்லாலையைச் சேர்ந்த தனிமையில் வாழும் கொலஸ்ரிகா என்ற வயதனா தாய் ஒருவருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கோழிக்கூடு மற்றும் கோழிகள் என்பன அவரின் வாழ்வதாரத்திற்காக அவரது வீட்டில் வைத்து எமது சங்கத்தின் முன்னால் தலைவரும் தற்போதைய கனடாக்கிளை உறுப்பினருமான திரு.ச.லோகேஸ்வரன்(ஈசன்) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.மேற்படி விண்ணப்பமானது கொலஸ்ரினா அவர்களினால் எமது சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இவ் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ் விண்ணப்பத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில் தனக்கு மாதாந்த பொதுசன உதவிப்பணத்தை தவிர வேறு எந்தவொரு உதவியும் இன்றி பிறப்பிலிருந்து விசேட தேவைக்குரியவராக இருக்கும் நான் மூன்று வயதாக இருக்கும் போது எனது பெற்றோரை இழந்து விட்டேன் அதன் பின்பு நானும் எனது அக்காவும் பல இன்னல்களுடன் வாழ்ந்து வந்தோம் இப்போது எனது அக்காவிற்கும் இயலாத நிலை மிகவும் கஷ;டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தமது வாழ்வாதாரத்திற்கு கோழிக்கூடும் கோழியும் வாங்கித்தரும் படி கேட்டதற்கு இணங்க இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ் மனிதபிமான உதவியைச் செய்த திரு.ரூபன் அவர்களுக்கும் கனடாக்கிளையினருக்கும் பயனாளி சார்பிலும் எமது தாய்ச்சங்கம் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.

A2a8