
Posted by plotenewseditor on 9 September 2016
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 9 September 2016
Posted in செய்திகள்
உடுவில் மகளிர் கல்லூரியில் ஆறு போராட்டத்திற்கு கிடைத்த அமைதியான தீர்வு உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மல்லாகம் மாவட்ட நீதவான் யூட்சன் மற்றும் மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் குறித்த விடயத்தில் தலையிட்டு தீர்த்துவைத்துள்ளனர்.
கல்லூரிக்கு விரைந்த நீதவான் கல்லூரியின் அதிபராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த சிரானி மில்ஸ், கல்லூரியின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சனீதா பற்றீசியா ஜெபரட்ணம், மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தமது நியாயப்பாடுகளை மல்லாகம் நீதவானுக்கு தெரியப்படுத்தியதுடன், தமக்கு நேர்ந்த சித்திரவதைகளைக் கூறி நீதவானின் காலில் விழுந்தும் அழுதுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 9 September 2016
Posted in செய்திகள்
உடுவில் மகளீர் கல்லூரிக்கு பா.ம உறுப்பினர், வடமாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் விஜயம். தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் சிலரைக் கல்லூரி அதிபரின் விடுதி அறைக்குள் பூட்டி வைத்து அவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விடுதிக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளவும் தகவலறிந்து கல்லூரிக்கு பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 9 September 2016
Posted in செய்திகள்
கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்
கிளிநொச்சி பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஒரு வாரமாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள், தற்போது உண்ணாவிரதப் போராட்டமாக மன்னெடுத்து இந்தப் போராட்டம் தொடர்கின்றது. பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அவைகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
இந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கோரியிருந்த போதிலும், காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படாத காரணத்தினாலேயே தாங்கள் உணவு உண்ணாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு தொடர் போராட்டமாக ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர், கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு பகுதிகளில் ராணுவத்தினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணிகளை படையினர் விடுவித்துள்ளனர்.
ஆயினும், இவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. காணிகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
11,000 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை அதிரடியாக நீக்கிய துருக்கி அரசு
துருக்கியில் தடை செய்யப்பட்ட பிகேகே என்றழைக்கப்படும் குர்திஸ்தான் பணியாளர்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 11 ஆயிரம் ஆசிரியர்களை துருக்கி அரசாங்கம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
துருக்கியின் தென் கிழக்கே உள்ள சுமார் 14 ஆயிரம் ஆசிரியர்கள் சில வழிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்புவதாக துருக்கி பிரதமர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பள்ளிகள் மற்றும் போலிஸ், ராணுவம் மற்றும் சட்டத்துறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் களையெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விரைவாக விலக வேண்டும்
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய டொனால்ட் டஸ்க், வெளியேறிய பிறகும் பிரிட்டனுடன் நெருக்கமான உறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் தற்போது தெரீசா மேயின் கையில் தான் முடிவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
ஸ்லோவாக்கியாவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு பிரிட்டன் இல்லாமல் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.
கனவனை வெட்டிக் கொலை செய்த மனைவி நஞ்சருந்தி தற்கொலை முயற்சி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கனவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மனைவி நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
(8.9.2016) வியாழக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு கல்லடி இசை நடனக்கல்லூரி வீதி நொச்சிமுனைக் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். Read more