udu3உடுவில் மகளீர் கல்லூரிக்கு பா.ம உறுப்பினர், வடமாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் விஜயம்.  தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் சிலரைக் கல்லூரி அதிபரின் விடுதி அறைக்குள் பூட்டி வைத்து அவர்கள் மீது  தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விடுதிக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளவும் தகவலறிந்து கல்லூரிக்கு பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.udu2இந்த நிலையில் உடுவில் மகளிர் கல்லூரி அதிபராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த சிரானி மில்ஸ் 07 ஆம் திகதியான நேற்றைய தினம் தனது 60 வயதைப் பூர்த்தி செய்கின்ற நிலையில் அவரைக் கல்லூரியிலிருந்து விலகிச் செல்லுமாறு கல்லூரியை முகாமைத்துவம் செய்துவரும் திருச்சபையினர் தெரிவித்த போதும் அதற்கு கல்லூரியின் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை(05) முதல் மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
 
udu4புதன் இரவு கல்லூரிக்கு வருகைத்தந்த வடமாகாணக் கல்வியமைச்சர் த. குருகுலராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன், கஜதீபன் ஆகியோர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸ், ஆசிரியர்கள், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து கல்லூரியில் நிலவி வரும் பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்க்கும் வகையில் இரண்டு நாட்கள் கல்லூரி மூடப்படுவதாக வடமாகாணக் கல்வியமைச்சர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.