Header image alt text

brd02இலங்கையின் புதிய அரசியல் சட்ட யாப்பு உருவாக்க குழுவின் முக்கிய அங்கத்தவர் பா.ம.உறுப்பினர் ஜெயம்பதி விக்கிரமரட்ன உலக நாடுகளில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களின் சந்திப்பின்  தொடர்ச்சியாக ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இங்கையர்களை சந்திந்து  புதிய அரசியல் சட்ட யாப்பு தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து அது தொடர்பான விளக்கங்களையும் அளித்தார் இச்சத்திப்பில் புளொட் சர்பில் அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகநாதன் அவர்களும் ஜோமன் கிளைத் தோழர்களான பாவானந்தன், சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். Read more

viyalகனேடிய தமிழ் காங்கிரஸின் அழைப்பின் பெயரில் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டி.பி.எல்.எவ் (D.P.L.F)அமைப்பின் உப தலைவரும் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வியாளேந்திரன் அவர்கள் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதுடன் கனடாவில் பல்வேறு நிகழ்வுகளில்   பங்கேற்றுவருகின்றார்.     கனடிய தமிழ் காங்கிரஸின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள கனடிய – மட்டக்களப்பு நட்புறவு பண்ணைக்கு  நிதி திரட்டுமுகமாக இன்று நடைபெற்ற நடைபவனியிலும் திரு. வியாளேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.

maithripalaஇலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு சம்பந்தமாக தவறான பிரசாரங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊடக நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வது வருடாந்திர மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். Read more