Header image alt text

nethralandகடந்த 20 வருடங்களுக்குப் பின்னர் நெதர்லாந்தின் கேஎல்எம் டச் எயர்லைன்ஸ் சேவை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. நெதர்லாந்தின் தலைநகரான அம்ஸ்ரடாமிலிருந்து கொழும்புக்கான நேரடிச்சேவையே ஆரம்பமாகவுள்ளது. முதற் தடவையாக போயிங் 789-900 ரக டிரீம்லைனர் ரக விமானங்கள் இந்தச் சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. 2009இல் சிவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் உல்லாசப் பயணத்துறை கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. Read more

vali-northமீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், வலி. வடக்கில் 700 ஏக்கர் காணிகள் இம் மாத இறுதிக்குள் விடுவிக்கப்படவுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் காங்கேசன்துறை வடக்கு, தையிட்டி கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி, தெல்லிப்பளை பிரதேச செயலாளரினால் குறித்த காணிகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more

amnesty internationalaபொறுப்புக்கூறல் செயற்பாடுகளின்போது இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையற்ற தன்மை மற்றும் மந்தகரமான நகர்வுகள் காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தற்போது கடும் அதிருப்தி நிலவுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த அமர்வின் போது விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுப்பெற்றிருந்தாலும் யுத்தத்திற்கு முன்னர், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் மிகவும் கொடூரமான யுத்தக்குற்றங்களும் மனித குலத்தக்கு எதிரான பல அநீதிகளும் இழைக்கப்பட்டுள்ளன. Read more

thasmeniyaவர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தஸ்மேனிய பிரதமர் வில் கொஜ்மான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தனது விஜயம் இலங்கையுடனான முக்கியமான வாத்தக உறவை ஏற்படுத்தியிருப்பதாக தஸ்மேனிய பிரதமர் கூறியிருக்கின்றார். தஸ்மேனிய பிரதமருடன் அந்நாட்டு வளர்ச்சி, சக்தி, சூழல் அமைச்சர் உட்பட உயர்மட்டத்திலான வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கைக்கான மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். தஸ்மேனியாவிலிருந்து அரச உயர் அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும். Read more

jaffna-army-commanderயாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்பதுடன் இராணுவத்தின் எண்ணிக்கையும் குறைக்கப்படமாட்டாதென யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இது தொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள அவர், 2010ஆம் ஆண்டுவரை பலாலி உயர் பாதுகாப்பு வலயம், 11,269 ஏக்கர் பிரதேசத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அதன் பின்னர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில், 7,210ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டன. பாதுகாப்புக்குத் தேவைகளுக்கு அவசியமான எஞ்சியுள்ள எந்தக் காணிகளையும் மீள ஒப்படைப்பதில்லை என்பதே இராணுவத்தின் நிலைப்பாடாக உள்ளது. Read more