thasmeniyaவர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தஸ்மேனிய பிரதமர் வில் கொஜ்மான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தனது விஜயம் இலங்கையுடனான முக்கியமான வாத்தக உறவை ஏற்படுத்தியிருப்பதாக தஸ்மேனிய பிரதமர் கூறியிருக்கின்றார். தஸ்மேனிய பிரதமருடன் அந்நாட்டு வளர்ச்சி, சக்தி, சூழல் அமைச்சர் உட்பட உயர்மட்டத்திலான வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கைக்கான மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். தஸ்மேனியாவிலிருந்து அரச உயர் அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும். இலங்கை கிரிக்கட் சம்மேளன அதிகாரிகளின் சந்திப்பின்போது, தஸ்மேனியாவில் தொடர் கிரிக்கட் போட்டிகளை நடாத்துவது பற்றியும், உல்லாசப் பயணத்துறைக்கு வாய்ப்பளிப்பது பற்றியும், கிரிக்கட் வீரர்களை அனுப்புவது பற்றியும் அவர் அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார். தஸ்மேனியா சகலவித வர்த்தகங்களுக்கும் தன் கதவைத் திறந்து வைத்துள்ளது. எங்கள் நாடு பாதுகாப்பானது. நம்பிக்கையானது, சந்தர்ப்பங்களை வரவேற்கிறோம் என்று பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.