nethralandகடந்த 20 வருடங்களுக்குப் பின்னர் நெதர்லாந்தின் கேஎல்எம் டச் எயர்லைன்ஸ் சேவை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. நெதர்லாந்தின் தலைநகரான அம்ஸ்ரடாமிலிருந்து கொழும்புக்கான நேரடிச்சேவையே ஆரம்பமாகவுள்ளது. முதற் தடவையாக போயிங் 789-900 ரக டிரீம்லைனர் ரக விமானங்கள் இந்தச் சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. 2009இல் சிவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் உல்லாசப் பயணத்துறை கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் இத்துறை இரட்டிப்பு வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஐரோப்பியர்களுக்கு பிடித்தமான உல்லாசப் பயண இடமாகவும் இலங்கை மாறியுள்ளது. எனவே எங்கள் சேவையை இலங்கைக்கு நீடிப்பதையிட்டு பெருமகிழ்சியடைகிறோம் என இந்திய உபகண்ட பொது முகாமையாளர் மாக்ஸ் சிமிற்ஸ் தெரிவித்துள்ளார். பாரிஸ், பிராங்பேர்ட் ஆகிய நகரங்களில் தரிப்பதிலிருந்து இலங்கை வெளியேறியுள்ளது எமது தீர்மானத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் 1997இல் யுத்தம் வெடித்த சமயம் கேஎல்எம் விமானசேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.