Header image alt text

bangladeshபங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ_ம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் கம்ரூல் அஷன், என்ன காரணத்திற்காக ஒன் அரைவல் வீசா நிறுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். Read more

kalaiyarasanகிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளனர். வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் 7வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்துள்ளனர். Read more

eluvaithivuகிளிநொச்சி இரணைதீவில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் குறித்த பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால  யுத்தம் காரணமாக கடந்த 1992ஆம் ஆண்டுமுதல் இரணைதீவில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 200 மீனவக் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். Read more

exam ....கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்தமாதம் 4ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வைபவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் காலை 10 மணிக்கு இடம்பெறும். இவர்களது நியமனம் அந்த மாதம்முதல் நடைமுறைக்கு வருமென்றும் கல்வி அமைச்சின் கல்வி சேவைகள் உள்ளக மேலதிக செயலாளர் ஐ.எம்.கே.பி. இங்கசிங்ஹ தெரிவித்துள்ளார். Read more

kapila-jayampathiஇலங்கை விமானப்படையின் 16 ஆவது தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

விமானப்படை தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. விமானப்படையின் உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மேற்படி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வினில் கலந்துகொண்டிருந்தனர்.

eluvaithivuகரையோரப் போக்குவரத்து சேவைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, எழுவைதீவில் ஒரு புதிய இறங்குதுறைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்திருப்பதாக வட பிராந்திய கடற்படை கமாண்டர் றியர் அட்மிரல் பியந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இங்கு கப்பல் சேவையை மேம்படுத்த கப்பல், துறைமுக அமைச்சின் ஒரு கிளை அலுவலகம் ஊர்காவற்றுறையில் திறக்க ப்பட்டுள்ளது. கடல் மார்க்காமாக வரும் கப்பல்களின் தகுதிகாண் அத்தாட்சிப் பத்திரங்களை இந்த அலுவலகம் விநியோகிக்கும். இங்கு இடம்பெற்ற சந்திப்பு நிகழ்வொன்றில் குடாநாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்யும்போது இத் தகவல்கள் வெளியிடப்பட்டன. Read more