eluvaithivuகரையோரப் போக்குவரத்து சேவைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, எழுவைதீவில் ஒரு புதிய இறங்குதுறைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்திருப்பதாக வட பிராந்திய கடற்படை கமாண்டர் றியர் அட்மிரல் பியந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இங்கு கப்பல் சேவையை மேம்படுத்த கப்பல், துறைமுக அமைச்சின் ஒரு கிளை அலுவலகம் ஊர்காவற்றுறையில் திறக்க ப்பட்டுள்ளது. கடல் மார்க்காமாக வரும் கப்பல்களின் தகுதிகாண் அத்தாட்சிப் பத்திரங்களை இந்த அலுவலகம் விநியோகிக்கும். இங்கு இடம்பெற்ற சந்திப்பு நிகழ்வொன்றில் குடாநாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்யும்போது இத் தகவல்கள் வெளியிடப்பட்டன. கடற்படை வீரர்களையும், அவர்கள் தொழிற்திறனையும் பயன்படுத்தி மிகக்குறைந்த செலவில் இந்த இறங்குதுறை நிர்மாணிக்கப்படவுள்ளது என கடற்படைத் தளபதி மேலும் தெரிவித்தார். யாழ் குடாநாட்டின் 11 தீவுகளில் ஏழு தீவுகளில் மாத்திரம் மக்கள் குடியிருக்கின்றார்கள். ஏனைய நான்கும் ஆள் நடமாட்டமற்ற பிரதேசங்களாகவே இருக்கின்றன. எழுவைதீவு, அனலைதீவு கடல்பரப்புகள் ஆழம் குறைந்தவை. எனினும் குறைந்த பட்சம் 600மீற்றர் ஆழம் ஒரு இறங்குதுறை அமைக்க அவசியப்படுகின்றது. எனவே ஆழமான கடற்பரப்பு வரை நீளும் நீண்ட கப்பற் துறையை அமைப்பதே தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்தது என்று தெரிவிக்கபபட்டுள்ளது.