siddharthanசில்லாலை வட மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டமும் மாணவர்களுக்கான கௌரவிப்பும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளு மன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆற்றிய உரை,

எமது மக்கள் சுமார் 80 சத­வீ­த­ம­ள­விற்­கு மேல் நம்­பிக்­கை­யு­டனும் எதிர்­பார்ப்­பு­டனும் ஒரு மாற்­றத்­திற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வாக்­க­ளித்­துள்­ளார்கள். ஆனால், மாற்றம் ஏற்­படவில்லை. அத்­த­கைய சூழலில் மிக மெது­வா­கவே ஓரு சில நட­வ­டிக்­கைகள் நகர்ந்­து­கொண்டு செல்­கின்­றது.
குறிப்­பாக காணி­வி­டு­விப்பு, சிறைச்­சாலையில் உள்ள தமிழ் இளை­ஞர்­களின் விடு­விப்பு, காணாமல் போன­வர்கள் தொடர்­பான விட­யங்கள் மற்றும் அன்­றா­டப்­ பி­ரச்­சி­னைகள் தொடர்பில் மெது­வாகவே நட­வ­டிக்­கைகள் நகர்ந்­து ­வ­ரு­கி­றது. இவை தொடர்பில் துரி­தப்­ப­டுத்த வேண்டும். மக்­களின் வாழ்க்கை நிலைகள் மீண்டும் சக­ஜ­மான நிலைக்கு அல்­லது முன்­னேற்­ற­மான நிலைக்கு வர­வேண்டும் என்ற நிலைப்­பாடு இருந்து கொண்­டி­ருக்­கின்­றது.

போராட்டம் என்ன கார­ணத்­திற்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டதோ அந்த அடிப்­படைக் கார­ணங்கள் தீர்க்­கப்­ப­டாமல் நியா­ய­மான அர­சியல் தீர்வு ஓன்றை பெற்றுக்கொள்­ளாமல் எங்­க­ளு­டைய முழு­மை­யான பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வது கடினம் என்­பதை நாம் அனை­வரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்­க­ளு­டைய பகு­தி­களில் இருக்கக்கூடிய பிரச்­சி­னை­களை நாங்­களே தீர்த்துக் கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான ஒரு அர­சியல் தீர்­வொன்று வழங்­கப்­பட்டு அத்­தீர்வு சரி­யான முறையில் நடைமுறைப்­ப­டுத்­தப்படுவதன் மூலம் தான் எங்­க­ளு­டைய மக்­க­ளு­டைய வாழ்க்கை முன்­னேற்றம் அடையும்.

மாகாண சபை இருக்­கி­றது. அதனால் ஓன்றும் கிடைக்­க­வில்லை என நினைக்­கலாம். ஆனால், மாகா­ண­ச­பைக்கு குறிப்­பிட்ட அள­வுதான் நிதி கிடைக்­கி­றது. அதுவும் எதற்­காக செலவு செய்­ய­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தான் அவை கிடைக்­கி­றது. மிக சொற்­ப­மான நிதியை வைத்­துக்­கொண்­டுதான் சில விட­யங்­களை செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அதே­நே­ரத்தில், மாகா­ண­சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­பெற்­றது. முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­கி­னேஸ்­வரன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்டும் மாகா­ண­ச­பைக்குள் பல குழப்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன. சபை அமர்­வுகள் கூட ஆக்­க­பூர்­வ­மாக நடை­பெறு­வ­தில்லை என்­பதை பத்­தி­ரி­கை­யூடாக பார்க்­கின்­றீர்கள். இத்­த­கைய நிலை­மைகள் ஆரோக்­கி­ய­மான சூழ்­நி­லைகள் அல்ல.

நாங்கள் அழி­வி­லி­ருந்து மீள முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற இனம். அத்­த­கைய ஒரு இனத்­தினைச் சேர்ந்த மக்கள் ஒற்­று­மை­யாக இருக்­கின்­றனர் என்­பதை நடை­பெற்று நிறை­வ­டைந்த தேர்தல் பெறு­பே­று­களின் ஊடாக மக்கள் தெளிவாக காட்­டி­யுள்­ளார்கள்.

அவ்­வா­றி­ருக்­கையில், தற்­போது கட்­சிகள், தலை­மைகள், ஒற்­று­மை­யா­கவும் அங்­கத்­த­வர்கள் ஒற்­று­மை­யாக செயற்­ப­டு­வதன் மூலம்தான் எங்­க­ளு­டைய மக்­க­ளு­டைய வாழ்க்­கையை வாழ்க்­கைத் ­த­ரங்­களை உயர்த்த முடியும். எமக்­கான உரி­மை­களை பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். இதன் முலம் தான் எமக்கு அடுத்­து­வரும் சந்­த­திகள் வள­மான வாழ்வை வாழ்­வ­தற்­கான சிறப்­பான எதிர்­காலம் உரு­வாகும்.
பூர­ண­மான விடு­தலை எது­வெ­னக்­ கூறு­வ­தா­க­வி­ருந்தால் முத­லா­வ­தாக தேசிய விடு­தலை. மற்­றை­யது மக்­க­ளு­டைய வாழ்க்­கைத்­த­ரங்கள் உய­ர­வேண்டும். இவை இரண்­டிலும் நாங்கள் பின் தள்­ளித்தான் தற்­போதும் இருக்­கின்றோம். இவற்றை முன்­னோக்கிச் செல்­வ­தற்கு மக்­க­ளு­டைய அழுத்தம் கட்­டாயம் இருத்தல் வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பு மாற்றம்

தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்பில் நீண்­ட­கா­ல­மாக பேசப்­பட்டு வந்­தாலும் தற்­போ­துள்ள புதிய அர­சாங்கம் பத­விக்­கு ­வந்த பின்னர் நிச்­ச­ய­மாக அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் வரும். அதில் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு நியா­ய­மான தீர்­வு­வரும் என்ற நம்­பிக்கை மக்கள் மத்­தியில் இருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தலைவர் சம்­பந்தன் மிக நம்­பிக்­கை­யுடன் 2016ஆம் ஆண்­டுக்குள் தீர்வு வந்து விடும் என்று பல தடவை கூறி­வ­ரு­கின்றார். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் அதற்­கான உந்­து­தல்­களை பல வழி­களில் செய்து வரு­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­திற்கு ஒரு தேசிய பேரவை அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு வழி­ந­டத்தல் குழு ஒன்றும் உள்­ளது. இந்த வழி­ந­டத்தல் குழு­விற்கு தலை­வ­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருக்­கின்றார். வழி­ந­டத்தல் குழு­வுக்கு அடுத்­த­தாக மூன்று முக்­கிய குழுக்கள் காணப்­ப­டு­கின்­றன. தேர்தல் முறை மாற்றம், ஜனா­தி­பதி அதிகா­ரங்­களை குறைப்­பது, மற்­றை­யது தமிழ் மக்­க­ளு­டைய தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு ஆகிய விட­யங்­களை ஆராய்­வ­தற்­கா கவே அக்­கு­ழுக்கள் காணப்­ப­டு­கின்­றன.

தேர்தல் முறை மாற்றம்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நீண்ட உரை­யா­டல்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­ன்றன. அதில் சில இணக்­கப்­பாடுகள் வந்­த­போதும் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் மற்றம் ஹக்கீம் போன்­ற­வர்கள் தங்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­துவம் வெகு­வாகக் குறைக்­கப்­படும் என்ற கார­ணத்தால் சில விட­யங்­களை எதிர்த்­துள்­ளார்கள்.

தேர்தல் முறைமை தொடர்­பாக தற்­போதைய இணக்­கப்­பாட்டில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை 240 பேராக அதி­க­ரிப்­ப­தென்றும் அதில் 60 சத­வீத­மான பிர­தி­நிதிகள் நேர­டி­யாக தேர்தல் மூலம் தொகுதி வாரி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். அடுத்து 40 சத­வீ­த­மான பிர­தி­நி­திகள் விகி­தா­சார தேர்தல் முறை மூல­மாக தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். இவ்­வா­றான தெரி­வு­களில் தொகு­திகள் அதி­க­மாக வரு­கின்றபோது வடக்கு, கிழக்கில் பிரச்­சினை ஏற்­ப­டாது. ஆனால் வடக்கு, கிழக்­கிற்கு வெளியே பர­வி­வாழும் முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு பாரிய பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுக்க நேரிடும். அவர்­க­ளுக்­கான தொகுதி நிர்­ண­யிப்­பது மிக கடி­ன­மா­னது. ஒரு தொகு­தியைக் கூட நிலை­யாக வைக்க முடி­யாது. இத்­த­கைய பிரச்­சி­னை­களால் தான் அந்த இரண்டு அமைச்­சர்­களும் வட­கி­ழக்­கிற்கு வெளியே­வாழும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்­காக கடு­மையாக எதிர்க்­கின்­றார்கள்.

இத்­த­கைய விட­யங்­களில் இணக்கம் காணப்­ப­டாத நிலையில் முக்­கி­ய­மாக எமது விட­யங்கள் தொடர்பில் ஆராய முற்­ப­டு­கின்ற போது வேக­மாக முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை உரு­வா­கின்­றது. எனினும் அது­தொ­டர்பில் விரைவில் ஒரு இணக்­கப்­பாட்டு ரீதி­யான தீர்­மா­ன­மொன்றை எடுப்­ப­தற்­கு­ரிய நிலை­மைகள் பேச்­சு­வார்த்­தை­களின் ஊடாக எடுக்­கப்­படும் என்ற அதீத நம்­பிக்கை உள்­ளது.
சமஷ்­டிக்­கான அவ­சியம்

அண்­மையில் ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உரையில், ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒற்­று­மைக்கு வந்­தி­ருக்­கின்றன. ஒற்­றை­யாட்­சிக்குள் தான் தீர்வு என்­பதை தெளிவாக கூறி­யுள்ளார். எம்­மைப் ­பொறுத்­த­வரை ஒற்­றை­யாட்­சிக்குள் நியா­ய­மான தீர்வு வர முடி­யாது. தீர்வு வந்­தாலும் ஒற்­றை­யாட்சி முறை­மை­யிலே முழு­மை­யான அதி­கா­ரங்கள் மத்­திய அர­சாங்­கத்­திற்­குத்தான் உள்­ளது.

இது தான் மாகாண சபை முறை­மைக்கும் நடந்­தது. மத்­திய அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் பின்­க­தவால் வந்து அதி­கா­ரங்­களை பிடுங்­கு­வார்கள். ஆகவே தான் அதனை ஏற்­க­ மு­டி­யாது என நாம் உறு­தி­யாக கூறு­வ­தோடு சமஷ்­டியைப் பற்றி கதைக்­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கையில் சமஷ்டி என்­பது பிரி­வி­னைக்­கு­ரி­யது என்று கூறு­வதை எம்மால் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அது ­வெ­று­மனே அர­சி­ய­லுக்­கான பிர­சா­ர­மா­கவே கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அழுத்­தங்கள் தொடரும்

வழி நடத்தும் குழுவின் கீழ் ஏழு உப­கு­ழுக்கள் உள்­ளன. அதில் ஒரு குழு­விற்கு நான் தலை­வ­ராக இருந்­து­ வ­ரு­கின்றேன். அதிலே என்­னு­டைய குழு மத்­திக்கும் மாகாணம் மற்றும் உள்­ளூராட்சி மன்­றங்கள் போன்­ற­வற்­றுக்­கான அதி­கா­ரங்கள், அவை எவ்­வாறு இணைந்து செயற்­படலாம் என்­பது தொடர்­பாக ஆராய்­கின்­றது. வழி­ந­டத்தும் குழு விவா­தத்தின் பின்­னரே பாரா­ளு­மன்­றத்­திற்கு இவ்­வி­டயம் கொண்­டு­வ­ரப்­படும். அந்தச் செயற்­பாடு எப்­போ­தென்­பதே கேள்விக் குறி­யா­க­வுள்­ளது. இருப்­பினும் நாம் அதற்­கு­ரிய பிர­யோக ரீதி­யான முயற்­சி­களை படிப்­ப­டி­யாக மேற்­கொண்டு வரு­கின்றோம்.

தற்­போ­தைய நிலையில் இந்­த ­வ­ருடம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு வழங்கும் செயற்­பாடு நிறைவு பெறாது, அடுத்த வருடம் தான் அதில் முன்­னேற்றம் ஏற்­படும் என்றும் பிரதர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார். இந்த வருடம் நிறை­வ­டை­வ­தற்கு இன்­னும் மூன்று மாதங்­களே உள்­ளன. அந்­நி­லையில் அடுத்­த­வ­ரு­டத்­திற்­கான வர­வு–­செ­ல­வு­த் திட்டம் தயார்­படுத்த வேண்­டி­யுள்­ளது. ஆகவே, இக்­கா­லப்­ப­கு­தியில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விடயம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான பொருத்­த­மான கால­மாக இருக்­காது எனக்­கருதி தான் அவர் அவ்­வாறு கூறு­கின்றார் என நினைக்­கின்றேன்.

எவ்­வா­றா­யினும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான விட­யத்தில் அனைத்துக் கட்­சி­க­ளு­டைய ஒற்­று­மைப்­பாட்­டையும் பெற­வேண்­டி­யுள்­ளது. இக்­க­டி­ன­மான விட­யத்தை நிறை­வேற்­றி­யே­யாக வேண்டும். அதற்­காக நாம் உரிய உந்­து­தல்­களை முறை­யாக மேற்­கொள்வோம். அதி­லி­ருந்து நாம் ஒரு­போதும் பின்­வாங்­கப்­போ­வ­தில்லை.

இக்­கட்­டான சூழல்

தற்­போ­தைய சூழல் இக்­கட்­டான நிலையில் தான் உள்­ளது. மிக கவ­ன­மாக பக்­கு­வ­மாக காரி­யங்­களை நகர்த்­தா­விட்டால் அனைத்தும் தவ­றா­கி­விடும். மீண்­டு­மொரு அழி­வுப்­பா­தைக்கு மக்­களை கொண்டு போகக்­கூ­டாது. அதனைச் செய்­யவும் மாட்டோம். அதில் நாம் தெளிவா­க­ வி­ருக்­கின்றோம். இவ்­வி­ட­யத்தில் நாங்கள் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். சில விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. சில விட­யங்கள் எமக்குத் தெரி­யா­மலே நடை­பெ­று­கின்­றன. நாமும் பொறு­மை­யுடன் இருக்­கின்றோம். அதனால் எம்மை மற்­ற­வர்கள் பல­வீ­ன­மா­ன­வர்கள் என்று கரு­தக்­கூ­டாது.

நாங்கள் நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுக்­க­வேண்­டி­யுள்­ளது அண்­மை­யிலே ஐ.நா செய­லாளர் பான் கீ மூன் வருகை தந்த போது பல விடயங்­களை அழுத்தம் திருத்­த­மாக எடுத்துக் கூறி­யுள்ளோம். எங்­க­ளுக்கு ஒரு நியா­ய­மான தீர்வு வழங்­கப்­ப­டாது விட்டால் எங்­க­ளு­டைய பகு­தி­களில் இந்த அர­சாங்­கங்­களை செயற்­பட அனு­ம­திக்க மாட்டோம் என்­பதை ஐ.நா.செய­லா­ள­ரிடம் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கூறி­யுள்ளார்.

நாங்கள் பல முயற்­சி­களை எடுப்போம். எமது விட­யத்தில் சர்­வ­தேச தலை­யீடு இருக்­கி­றது. அவர்கள் என்ன செய்­யப்­போ­கி­றார்கள் எவ்­வ­ளவு துரம் அழுத்தம் பிர­யோ­கிப்­பார்கள் என்­பதைப் பற்றிச் சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது. சர்­வ­தே­சத்தைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­க­ளுக்­காக அர­சாங்­கத்­திற்கு தான் ஆத­ரவு வழங்­கு­வார்கள்.

தமக்குச் சார்­பான அர­சாங்கம் கவிழ்ந்து விடக்­கூ­டாது என்பதற்காகவே எங்கள் விடயத்தில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, எங்களுக்காக அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. இவ்விடயங்களை மனதில் கொண்டு பல விடயங்களை சாணக்கியமான முறையில் கையாள வேண்டியுள்ளது.

பாரிய மக்கள் எழுச்சி

மீண்டுமொரு அழிவை சந்திக்க முடியாது. நடந்து முடிந்தவையே போதும். ஒரு ஜனநாயக முறையில் நியாயமான வகையில் நாங்களே எங்கள் பகுதியில் உள்ள விடயங்களை கையாளக் கூடிய தீர்வை வென்றெடுக்க வேண்டும். அதற்கு நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல கருத்துக்கள் இருந்தாலும் அந்த விடயத்தில் ஒற்றுமை உள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி பெரும் பேரணி நடைபெறவுள்ளது. இது தமிழ் மக்கள் பேரவை, இலங்கை தழிழரசு கட்சியில் உள்ள ஒரு சிலர், ஏனைய கட்சிகள் இணைந்து கொண்ட பாரிய மக்கள் எழுச்சியாக வரவேண்டும் என்பதே எனது நீண்டகால எண்ணமாக உள்ளது.

இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவருக்கும் தெளிவு படுத்திக் கூறியுள்ளேன். இப்படி­யான அழுத்தங்கள் கொடுப்பதன் மூலம் தான் அரசாங்கத்தினை சிந்திக்கச் செய்ய முடியும். தமிழ் மக்களுடைய கோரிக்கையை எற்றுக்கொள்ள வைக்க முடியும். அதே நேரம் இந்த அரசாங்கம் மெதுவாகவே பயணம் செய்கிறது. இருப்பினும் தீர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எமது விடயங்களை கவனமாக கையாள்வோம். அதற்கான பாதையில் பயணிப்போம்.

(நன்றி: வீரகேசரி 13.09.2016) தொகுப்பு எம்.நியூட்டன்-