யாழ்ப்பாணம் சில்லாலை வடமத்தி கிராம அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த ஒன்றுகூடலில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அத்துடன் பிரதேச மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.