யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி மாதர் அபிவிருத்திச் சங்கம் மற்றும் பறாளை நாவலர் சன சமூக நிலையம் ஆகியவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கென கணனிகள் கொள்வனவு செய்யப்பட்டு 09.09.2016 வெள்ளிக்கிழமை அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் கணனி அறிவினை மேம்படுத்தும் நோக்கில் இவை வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு கணனி வகுப்புக்கள் நடைபெறுவதற்கான ஒழுங்குகளையும் சுழிபுரம் மத்தி மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நாவலர் சனசமூக நிலையத்தினர் செய்துள்ளார்கள். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது அங்குள்ள பொதுத் தேவைகள் தொடர்பாகவும் கிராம அபிவிருத்தி பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.