யாழ். பருத்தித்துறை குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை திரு. சிவநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், கே.சயந்தன், கே.பரஞ்சோதி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் இறுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம், உயர்தரம் மற்றும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் ஆகிய பரீட்சைகளில் திறமைச் சித்திபெற்ற அப்பகுதி மாணவ, மாணவியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.