வெடிக்காத நிலையில் இருந்த ஷெல்லினை வெட்டியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.மணியம் தோட்டம், உதயபுரம், 3ஆம் குறுக்கு வீதி பகுதியைச் சேர்ந்த தாகிதப்பிள்ளை அன்ரன் பொஸ்கோ (வயது 37) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர், வெடிக்காத பழைய ஷெல்களை எடுத்து அவற்றில் இருக்கும் மருந்தினை மீன்பிடிப்பவர்களுக்கு விற்பனை செய்கிறவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று பழைய ஷெல்களை உடைக்கும் போது ஒரு ஷெல் வெடித்துச் சிதறியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வெடிப்புச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.