1யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் ஸ்தாபகர் நினைவு விழாவும் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் 12-09-2016 திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் சி.சிவராஜன் அவர்களின் தலைமையில் வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக எம்.காண்டீபன் ((பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக உயர்திரு. சு.சண்முககுலகுமாரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், உடுவில் கோட்டம்), பழைய மாணவி திருமதி. நிரஞ்சலா குணராஜ் (கணக்காளர், உணவு, விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருமதி கோகிலா மகேந்திரன் (நிபுணத்துவ ஆலோசகர் உள சமூகவள நிலையம், வட மாகாண கல்வியமைச்சு) அவர்கள் “மாணவர்களின் கல்வியும் பெற்றோரும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து நினைவுப் பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம், உயர்தரம் மற்றும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் ஆகிய பரீட்சைகளில் திறமைச் சித்திபெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

2 3 4 5 6 7 8 9 11