highwayதெற்கு அதிவேக வீதியின் களனிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக வீதியின் களனிகம தொடங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான 26 ஆவது மைல்கல் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதையின் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த ட்ரக் வாகனம் ஒன்றுடன் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான பஸ் வழமையான பொதுப் போக்குவரத்தில் ஈடுபடக் கூடியதல்ல என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.