Header image alt text

sddfயாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவது மற்றும் வீதி விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. தீர்வு காணப்படாமலுள்ள பல்வேறு குற்றச்செயல்களை விரைவுபடுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பது தொடர்பிலும் சட்டம் ஒழுங்கை முழுமையான முறையில் மாவட்டத்தில் நிலைநாட்ட ஏதுவான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. Read more

maithriநியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுமுற்பகல் 10.45 மணியளவில் ஜிகே 651 விமானத்தினூடாக நியூயோர்க் பயணமாகியுள்ளார்.

இந்த அமர்வு அமெரிக்க ஐனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நாளையதினம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. நாளையதினம் தொடக்கம் 26 ஆம் திகதி வரை மேற்படி அமர்வு நடைபெறவுள்ளது. Read more

doctorsமுல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த வைத்தியர் ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) கடந்த செவ்வாய்க்கிழமை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குறித்த வைத்தியரும் மரணமடைந்த இணை மருத்துவப்பிரிவு மாணவி லோறன்ஸ் அனா எப்சிபாவும், திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த நிலையில், குறித்த பெண் தீப்பற்றி எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமானார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் பேரில் மருத்துவரை கைது செய்துள்ளனர்.

ariyadasa-coorayஒழுக்கத்தை மீறி செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது, பொலிஸ் தாபன விதிக் கோவையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டுள்ளார். Read more

c1பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறார்களுக்கு ரூபா 10,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளன.

நேற்று வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அமரர் பஞ்சாட்சரத்தின் நினைவு தினத்தையொட்டி அவரது குடும்பத்தினரால் முள்ளியவளையிலுள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு ரூபா 10,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளன. Read more