பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறார்களுக்கு ரூபா 10,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளன.
நேற்று வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அமரர் பஞ்சாட்சரத்தின் நினைவு தினத்தையொட்டி அவரது குடும்பத்தினரால் முள்ளியவளையிலுள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு ரூபா 10,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளன.இல்ல மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிலுள்ள தடைகளை பூர்த்திசெய்ய முன்வந்துள்ள அமரர் பஞ்சாட்சரம் அவர்களின் குடும்பத்தினருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பிலும் இல்ல நிர்வாகத்தினர் சார்பிலும் நன்றிகளை தெரிவிப்பதோடு அமரர் பஞ்சாட்சரம் ஜயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)