முல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த வைத்தியர் ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) கடந்த செவ்வாய்க்கிழமை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குறித்த வைத்தியரும் மரணமடைந்த இணை மருத்துவப்பிரிவு மாணவி லோறன்ஸ் அனா எப்சிபாவும், திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த நிலையில், குறித்த பெண் தீப்பற்றி எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமானார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் பேரில் மருத்துவரை கைது செய்துள்ளனர்.