maithriநியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுமுற்பகல் 10.45 மணியளவில் ஜிகே 651 விமானத்தினூடாக நியூயோர்க் பயணமாகியுள்ளார்.

இந்த அமர்வு அமெரிக்க ஐனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நாளையதினம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. நாளையதினம் தொடக்கம் 26 ஆம் திகதி வரை மேற்படி அமர்வு நடைபெறவுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக்காலம் முடிவடைகின்ற நிலையில், அவரது இறுதி பொதுச்சபைக் கூட்டம் என்பதால் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்நிகழ்வினில் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை எதிரவரும் 21ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நாவின் 71ஆவது பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதியுடனான அமெரிக்க விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது