Header image alt text

mahinda desapriya (3)இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் அனைவரும் வாக்காளர் இடாப்பில் இணைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், போர் காரணமாக பாதிக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இடம்பெயர் முகா ம்களில் தங்கியிருக்கும் அனைவரும் வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்படுவர். தகுதி உடைய அனைவரினதும் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமையாகும். Read more

sdsகடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் கடல் அலையினுள் மூழ்கி இறந்துள்ள தகவல் அறிந்த பெற்றோர் இருவரும் மரணமடைந்துள்ளனர். துக்கம் தாங்காமலே இவ்விருவரும் மரணமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி திருமதி யோகேஸ்வரி சண்முகம் ஆகியோர்களே இவ்வாறு இறந்துள்ளனர். பாசிக்குடா கடலில் நண்பர்களுடன் நேற்று நீராடச் சென்ற ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இரு சகோதரர்கள் காணவில்லையென கல்குடா பொலிசார் தெரிவித்தனர். Read more

pakkir-markarதேசிய ஊடக நிலையத்தின் தலைவராக முன்னாள் ஊடக அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பதவியேற்றுள்ளார். விசும்பாயாவில் அமைந்துள்ள தேசிய ஊடக நிலையத்தில் இன்று அவர் உத்தியோகபூர்வமாக தம் பதவியினை ஏற்றுக்கொண்டார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவுள்ள இந்த நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க அண்மையில் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு, பிரதமர் ஊடகப்பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து தேசிய ஊடக நிலையம் செயற்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

arpattamகிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்பாறை மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

அம்பாறை மகாவாபி விகாரையில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம்வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, ரீகல் சந்திவரை பேரணியாகச் சென்று மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

former-ltteதற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரசாயன ஊசி விவகாரம் தொடர்பான பரிசோதனைகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தயக்கம் காட்டி வருவதாக வட மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, அது குறித்த யோசனை ஒன்று வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இவர்களை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டது. Read more

train-ticketநடைமுறையிலுள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த புதிய திட்டம் இன்னும் 6 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத பொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.