தேசிய ஊடக நிலையத்தின் தலைவராக முன்னாள் ஊடக அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பதவியேற்றுள்ளார். விசும்பாயாவில் அமைந்துள்ள தேசிய ஊடக நிலையத்தில் இன்று அவர் உத்தியோகபூர்வமாக தம் பதவியினை ஏற்றுக்கொண்டார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவுள்ள இந்த நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க அண்மையில் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு, பிரதமர் ஊடகப்பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து தேசிய ஊடக நிலையம் செயற்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.