நடைமுறையிலுள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த புதிய திட்டம் இன்னும் 6 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத பொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.