Header image alt text

dsc04661முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், ஜி.ரி. லிங்கநாதன் மற்றும் இந்திரராசா ஆகியோரினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் வட மாகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், இந்திரராசா ஆகியோரின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென நல்லின ஆடுகளும் கோழிக்குஞ்சுகளும், கோழிவளர்ப்பு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

img_0508முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு கட்டடங்கள் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டடமும் UN HABITAT நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கலைமகள் முன்பள்ளி கட்டடமும் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. பனிக்கன்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு. தவசீலன் அவர்களின் தலைமையில் கடந்த 15.09.2016 வியாழக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன் மற்றும் கமலேஸ்வரன் ஆகியோரும் மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். Read more

dsc04634முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தேவாலயம் மற்றும் ஆலயங்களுக்கான நிதியுதவி வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மாவட்டத்திலுள்ள தேவாலயம் மற்றும் ஆலயங்களுக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் தேவாலய மற்றும் ஆலயங்களின் நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

ss-7அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்கள் பிரதேச மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்த மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

un-meetingஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுக் கூட்டத்தொடர் இன்று நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 120 இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐநா பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றும் இரண்டாவது சந்தரப்பம் இதுவாகும். Read more

roshan-gunatillekeமுன்னாள் விமானப்படை தளபதி எயார் மாஷ்சல் ரொஷான் குணதிலக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய மிக் விமான கொள்வனவு தொடர்பிலேயே அவர் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

university-grant-commission2015ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி www.ugc.ac.lk அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ugc vd என டைப் செய்து இடைவெளி விட்டு சுட்டிலக்கத்தை பதிவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தில் கூறப்பட்டுள்ளது. (ugc சுட்டிலக்கம் – உதாரணம்: ugc 2223322) Read more