முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், ஜி.ரி. லிங்கநாதன் மற்றும் இந்திரராசா ஆகியோரினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் வட மாகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், இந்திரராசா ஆகியோரின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென நல்லின ஆடுகளும் கோழிக்குஞ்சுகளும், கோழிவளர்ப்பு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.