முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு கட்டடங்கள் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டடமும் UN HABITAT நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கலைமகள் முன்பள்ளி கட்டடமும் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. பனிக்கன்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு. தவசீலன் அவர்களின் தலைமையில் கடந்த 15.09.2016 வியாழக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன் மற்றும் கமலேஸ்வரன் ஆகியோரும் மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.