university-grant-commission2015ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி www.ugc.ac.lk அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ugc vd என டைப் செய்து இடைவெளி விட்டு சுட்டிலக்கத்தை பதிவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தில் கூறப்பட்டுள்ளது. (ugc சுட்டிலக்கம் – உதாரணம்: ugc 2223322)இதேவேளை இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார். இது கடந்த முறையை விட 10வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.