un-meetingஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுக் கூட்டத்தொடர் இன்று நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 120 இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐநா பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றும் இரண்டாவது சந்தரப்பம் இதுவாகும். இலங்கை நேரப்படி இன்றுமாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் பொதுச்சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான கயந்த கருணாதிலக,பைஸர் முஸ்தபா,அர்ஜுன ரணதுங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரும் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.