2கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 57ஆவது நினைவுதின நிகழ்வு யாழ்ப்பாணம் நீர்வேலி வாழைக்குலை சந்தையில் நேற்று (20.09.2016) மாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நினைவுப் பேருரையினை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா நிகழ்த்தினார். இந்நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர்களான வே.சிவயோகன், ச.சுகிர்தன், தர்மலிங்கம், மற்றும் மறவன்புலோ சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். பெண்களும் ஆண்களுமாக மண்டபம் நிறைந்த மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

1 3 4 5 6