Header image alt text

p1390853கடந்த 16.09.2016 இரவு ஏற்பட்ட தீவிபத்தினால் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ள கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு விஜயம் செய்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த பிரமுகர்களிடம் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வர்த்தக சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். மிகப்பெரியளவில் வங்கிகளில் கடன்பெற்று முதலீடு செய்தே இங்கு வியாபாரங்களை நடாத்தி வந்தோம். இப்போது எங்களால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாது. எனவே கடனை இல்லாமற் செய்வதற்கு வழிசெய்ய வேண்டும் அல்லது அந்தக் கடனைச் செலுத்துவதற்கு எங்களுக்கு ஒரு நீண்ட தவணையைப் பெற்றுத்தர வேண்டும். Read more

maithriநாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை உரையாற்றினார்.

இலங்கையில் தற்போது புதிய யுகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 20 மாதங்களில் அரசியல் பொருளாதார மீள் உருவாக்கம் தொடர்பில் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Read more

dumindaகடந்த 8ஆம் திகதி தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்து, சகல குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேன்முறையீடு செய்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைசெய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக கடந்த 20 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தனர். Read more

sfdவட மாகாணத்தில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரச ஊழியர்களது இடமாற்றம் இதுவரை காலமாக முன்னெடுக்கப்படாமையைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்றுகாலை 9மணியளவில் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணசபைகள் பிரிக்கப்பட்டபோது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 105 அரச ஊழியர்கள் வடமாகாணத்தில் கடமை புரிவதற்காக பணிக்கப்பட்ட நிலையில் 5 வருடகாலத்திற்கும் அதிக காலம் தாம் வடமாகாணத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வருவதாக இவர்கள் தெரிவித்தனர். Read more

maithri-john-geryஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன் அமெரிக்க இலங்கைக்கான உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டியுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க செயலாளர் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more

america-srilanka-naval-chieves-metஐக்கிய அமெரிக்க கடற்கட்டுப்பாட்டுத் தளத்தின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் ஜோன் எம். ரிச்சட்சன் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருநாட்டு கடற்பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

dsfdfdமட்டக்களப்பு திக்கோடை தும்பாலை பிரதேசத்தில் 49வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணபதிப்பிள்ளை மாமாங்கம் என்ற 4 பிள்ளைகளின் தந்தை கடந்த 19ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு புறப்பட்டவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கணவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில், நேற்று (21)மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் தொடர்பில் யாராவது அறிந்தால் 0776201665 என்ற தமது தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு காணாமல்போனவரின் மனைவி கோரியுள்ளார்.

sfdfdfddddவர்த்தக ரீதியிலான விமானப் பயணங்களை ஹிமாலயா எயர்லைன்ஸ் நிறுவனம் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நேபாளத் தலைநகரான காட்மன்டுவிற்கும் கொழும்புக்கும் இடையே ஆரம்பிக்க உள்ளது.

சீனா-நேபாளத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விமானசேவை வாரத்தில் மூன்று நாட்கள்- செவ்வாய், வியாழன், சனி நாட்களில் இடம்பெறும். 158 இருக்கைகளைக் கொண்ட ஏ320 ரக விமானங்களை இந்த நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்தியா, சீனாவை அடுத்து நேபாளத்திற்கு உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் நாடாக இலங்கை இருந்து வருகின்றது. Read more

yawaththa-ic-officeகொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹ_ருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹ_ருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

d1புலம்பெயர் உறவான லண்டன் நாட்டில் வசிக்கும் கிருபாகரன் அபிசன் தனது 11வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கபட்ட குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியையும் வறுமையில் கல்வியை தொடரும் இரண்டு மாணவர்களுக்கு துவிசக்கர வண்டிகளையும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக இன்று வழங்கி வைத்துள்ளார்.

தொல்புரம் மத்தி சுழிபுரம் எனும் முகவரியை கொண்ட மேரி குணவதி கடந்த யுத்தத்தின்போது தனது கணவரை இழந்துள்ள இவர் தனது வாழ்வாதாரத்திற்க்காக பால் வியாபாரம் செய்து தமது குழந்தைகளையும் கல்வி கற்பித்து வரும் இவருக்கு மாட்டு கொட்டகை அமைத்து தரும்படி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக Read more