அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன் அமெரிக்க இலங்கைக்கான உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டியுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க செயலாளர் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நல்லாட்சியை மேம்படுத்துவதுடன் மனித உரிமையை உறுதிப்படுத்தவும் ஜனநாயக நகர்வுகளை வலுப்படுத்தவும் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என அமெரிக்க இராஜாங்க அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை மேலும் குறிப்பிட்டுள்ளது.