d1புலம்பெயர் உறவான லண்டன் நாட்டில் வசிக்கும் கிருபாகரன் அபிசன் தனது 11வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கபட்ட குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியையும் வறுமையில் கல்வியை தொடரும் இரண்டு மாணவர்களுக்கு துவிசக்கர வண்டிகளையும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக இன்று வழங்கி வைத்துள்ளார்.

தொல்புரம் மத்தி சுழிபுரம் எனும் முகவரியை கொண்ட மேரி குணவதி கடந்த யுத்தத்தின்போது தனது கணவரை இழந்துள்ள இவர் தனது வாழ்வாதாரத்திற்க்காக பால் வியாபாரம் செய்து தமது குழந்தைகளையும் கல்வி கற்பித்து வரும் இவருக்கு மாட்டு கொட்டகை அமைத்து தரும்படி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இன்று அவருக்கு ரூபா 32,775 பெறுமதியான மாட்டு கொட்டகை அமைப்பதற்க்கான 12 தகரங்கள் மற்றும் மரங்களும் வழங்கி வைக்கபட்டதுடன் வட்டு இந்து கல்லூரியில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்கள் துவிசக்கரவண்டிகள் இல்லாது தாம் கல்வியை தொடர்வதற்கு பல துயரங்களை எதிர்கொள்வதாக விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அம் மாணவர்களுக்கான துவிசக்கரவண்டிகளும் இன்று அன்பளிப்பாக வழங்கபட்டன.

தமது பிள்ளையின் பிறந்த தினத்தில் ஈழத்தில் உள்ள உறவகளை நினைத்து அவர்களின் துயரங்களையும் தமது துயரங்களாக உணர்ந்து இவ் கைங்கரியத்தை ஆற்ற முன்வந்துள்ள கிருபாகரன் திலகா தம்பதியினருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கும் தருணத்தில் செல்வன் கி.அபிசன்னுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதடன் பல்கலையும் பயின்று நீண்ட ஆயுள்ளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க்க வேண்டும் என இறைவனை பிராத்திக்கின்றோம்

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி-

யாழ். கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமான மதியமுதன் சுகந்தினி அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எமது புலம்பெயர் உறவான அவுஸ்ரோலியாவைச் சேர்ந்த த.அச்சனா அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரூபா 25000 ரூபாவினை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினுடாக இன்று வழங்கி வைத்துள்ளார்.

சுகந்தினி தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டதவாறு தனது கணவர் கடந்த 2001ம் ஆண்டு யுத்த காலத்தில் அகால மரணமடைந்து விட்டார். அதன் பிற்பாடு பல இன்னல்களுடன் எனது பிள்ளையுடன் வாழ்ந்து வந்தேன். தந்தையின் இழப்பின் காரணமாகவும் குடும்ப வறுமை காரணமாகவும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று தொடர்ந்தும் கல்வி கற்று வருகின்றார்.

என்னுடன் எனது தாயரும் வாழ்ந்து வருகின்றார். எனது வாழ்வாதாரத்தினை கொண்டு நாடத்துவதற்கு வழி ஏதும் இன்றி திண்டாடி வருகின்றோம். பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து பலன் ஏதும் இல்லாத நிலையில் உங்களுக்கு இவ் கடிதத்தினை எழுதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்இ.

வ் வாழ்வாதார உதவியை வழங்க முன் வந்த எமது புலம்பெயர் உறவான த.அச்சனா அவர்களுக்கு பயனாளி சார்பிலும் எமது சங்கத்தின் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்களது பெற்றோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

(வட்டு இந்து வாலிபர் சங்கம்)

d2 d3 d4 d5