seetharamanஇந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எதிர்வரும் 26ஆம்திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர், 28ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார்.

இலங்கையின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை, இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 27ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியா – இலங்கை இடையே செய்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என்று தெரியவருகிறது. கடந்த மாதம் 25ஆம் திகதி இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொழும்பு வந்து பேச்சுக்களை நடத்த திட்டமிட்டிருந்தார். எனினும், புதுடெல்லியில் இருந்த அவசர பணிகள் காரணமாக அவரது அந்தப் பயணம் பிற்போடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.