Header image alt text

ranil-maithriபிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாரம் நியூஸிலாந்துக்கு விஜயம் செய்யவிருப்பதாக நியூசிலாந்து நாட்டுப் பிரதமர் ஜோன் கீ அறிவித்துள்ளார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பிராந்தியப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜோன் கீ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இலங்கைப் பிரதமரின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். Read more

nirmala-seetharamanஇந்தியாவின் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்றுமாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

நிர்மலா சீத்தாராமன் தனது இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

anurathapuram-jailஅநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தழிழ் அரசியல் கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் 17 பேரும் கடந்த 21ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more

ruwanவடக்கில் இருந்து படைகளை விலக்குமாறு சிலர் பேரணிகளை நடத்தினாலும், வடக்கில் இருந்து படை முகாம்களை அகற்ற அரசாங்கம் ஒருபோதும் இணங்காது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், ”இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த கடும்போக்குவாத செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சில கடும்போக்குவாதக் குழுக்களால் பேரணி நடத்தப்பட்டது. Read more

bombsயாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்றுமாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

thissa-aththanayakeஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி அவரை எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரான இவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கடந்த 9ம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலி ஆவணங்களை வெளியிட்டமை, உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

lasanthaசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை பொரளை கனத்தை மயானத்திலிருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கல்கிசை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவுக்கு அமைவாக சடலம் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30க்கு சடலம் தோண்டிஎடுக்கப்படவுள்ள நிலையில் தற்போது கனத்தை மயானத்திலுள்ள லசந்தவின் கல்லறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.