Header image alt text

p1400297தீர்வு நோக்கிய பயணத்திற்கு எழுக தமிழ் வலுச்சேர்க்கும், கேட்டால் தான் எதனையும் பெறமுடியும் என்கிறார் புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி- 

எழுக தமிழ் எழுச்சி பேரணியானது நீடித்த நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும் என தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எமது உரிமைகளை கேட்பதில் எந்த தவறுமில்லை. கேட்டால் தான் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சி பேரணி தொடர்பில் தென்னிலங்கை கொண்டிருக்கும் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகளை அப்பேரணி பாதிக்குமா என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
Read more

dsc04782முல்லைத்தீவு மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினூடாக ஒரு நடமாடும் கால்நடை வைத்திய சேவை உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், டொக்டர் சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வலயக் கல்விப் பணிப்பாளர் முனீஸ்வரன், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள மாவட்ட ஆணையாளர், கால்நடை வைத்தியர்கள், அதிகாரிகள், பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

anurathapuram-jailதமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து, கடந்த ஒருவாரமாக முன்னெடுத்திருந்த தொடர் உண்ணாவிரதத்தை அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று கைவிட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதியமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்ற வரம்பிற்குள் மாற்றுமாறும் கோரிக்கை விடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 21ஆம் திகதிமுதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். Read more

courts1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அச்சுவேலியிலிருந்த இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் சிலர், பொதுமக்கள் இருவரை சுட்டுப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இராணுவ வீரர்கள் 11 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், நேற்று உத்தரவிட்டார்.

அந்த 11 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, அவர் இப் பிடியாணையை பிறப்பித்துள்ளார். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய இராணுவவீரர்கள் ஐவரையும் எதிர்வரும் 10ஆம்திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு, யாழ். நீதவான் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

maithripalaமாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அரச திறைசேரியில் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக, ஜனாதிபதி ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் மாதங்களில் வெளிநாடுகளுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும் மாகாண சபை உறுப்பினர்களும், அதுகுறித்து திறைசேரிக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். Read more

mahindananthaவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் நிதி திரட்டியமை மற்றும் அந்த நிதியைப் பயன்படுத்தி சொத்துக்களை கொள்வனவு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. Read more

sfdfddஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்ற ஆளில்லா கேமராவால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைக்காக அவரது சடலம் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடும் பாதுகாப்புடன் பொரளை பொதுமயானத்தில் தோண்டப்பட்டது. குறித்த பகுதிக்குள் செல்ல ஊடகவியலாளர்கள் உட்பட ஒருவரும் இடமளிக்கப்படவில்லை. Read more

kanaththaபடுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று முற்பகல் 9மணியளவில் தோண்டியெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட அவரது சடலம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. Read more

sarath fonsekaஇராணுவத் தளபதியாகவிருந்த தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரியுள்ளார்.

லங்காதீப வாரஇதழுக்கு அளித்த செவ்வியில் அவர், 2009ஆம் ஆண்டு பிரபாகரன் கொல்லப்பட்ட பின், அவரது அடையாள அட்டையையும், அடையாளத் தகட்டையும், கொழும்புக்கு அனுப்புமாறு நான் மேஜர்ஜெனரல் கமால் குணரத்னவுக்கு உத்தரவிட்டேன். எனினும், அவை கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதா என்பதை என்னால் அறிய முடியவில்லை. பிரபாகரனின் அடையாள அட்டையை மேஜர்ஜெனரல் கமால் குணரத்னவே வைத்திருக்கிறார் என்பதை அவர் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய பின்தான் எனக்குத் தெரியும். Read more

earthquakeகாலியில் சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன நில அதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையங்களில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எந்தெந்த பகுதிகளில் நில அதிர்வு பதிவாகியுள்ளது என்பது தொடர்பிலும் அதனளவு குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக நிலையம் கூறியுள்ளது.