முல்லைத்தீவு மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினூடாக ஒரு நடமாடும் கால்நடை வைத்திய சேவை உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், டொக்டர் சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வலயக் கல்விப் பணிப்பாளர் முனீஸ்வரன், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள மாவட்ட ஆணையாளர், கால்நடை வைத்தியர்கள், அதிகாரிகள், பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.