kanaththaபடுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று முற்பகல் 9மணியளவில் தோண்டியெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட அவரது சடலம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த முரண்பாடுகளை தணிக்கும் வகையில் பரிசோதனைகளை மீள மேற்கொள்வதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ம்திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.