Header image alt text

dsc04948முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி மாகாணக் கல்வியமைச்சினால் மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடாத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அதிதிகளாக வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், முன்பள்ளிகளின் மாகாணப் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், பங்குத்தந்தை, துணுக்காய், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். Read more

saarcபாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. உரி என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.

இதற்கு ஆதரவாக பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளும் இந்த மாநாட்டைப் புறக்கணித்தன. ஐந்து நாடுகள் மாநாட்டைப் புறக்கணித்ததால் சார்க் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

dgfதகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது.

தகவல் அறிதல் மற்றும் ஊடக புனர்நிர்மாணம் என்ற தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த மாநாட்டில் தெற்காசிய வலயம் மாத்திரமல்லாது ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் ஆகிய அனைத்திற்கும் ஊக்கமளித்து, பாதுகாக்கும் நாடு என்ற ரீதியில் தகவல் அறியும் உரிமையும் நாட்டின் அனைத்து பிரிவுகளிலும் திறக்கப்பட வேண்டும் என இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். Read more

karate-1முல்லைத்தீவு மாவட்டத்துக்கான கராத்தே போட்டி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், விளையாட்டு அதிகாரி மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

nalliah_kumaraguruparanபூமி புத்திரர்கள் என்னும் கோட்பாடு இலங்கை பிரஜைகளுக்கு ஏற்புடையதல்ல. சிங்களவராயினும், தமிழராயினும், முஸ்லிம்களாயினும் இலங்கையர் அனைவரும் வந்Nதுறு குடிகள் என்பதில் உண்மை உண்டு. இதை புரியாது 1000 வருடம் கடந்த தமிழர் வரலாற்றை அறியாத கலேகொட அத்தே ஞானசார தேரர் சகல தமிழர்களும் இந்தியா செல்ல தயாராக வேண்டும் என்று சொல்வதன் மூலம் தமது வரலாற்றையே அறியாது பேசுகின்றார்.

வங்கத்திலிருந்து வந்த விஜயன் குவேனியோடு வாழ்ந்து பெற்ற பிள்ளைகள் யார் என்பதையும் பின்னர் மதுரையிலிருந்து தமிழ் அரச பரம்பரையின் அரசியை மணந்து கொண்டார் என்பதும் வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியும். ஆனால் இதை அறியாதவர் போல் ஞானசார தேரர் தமிழர்களை இந்தியா செல்லத் தயாராக வேண்டும் என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
Read more

vigneswaranஅபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசு மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கு பயன்படக் கூடும் எனவும் வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Read more

gnanasara-theroதமிழீழமும் இனவாதமும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் விக்கினேஸ்வரன் இன்று இரண்டாவது பிரபாகரனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

சிங்களவர்களின் இறுதிக்கட்ட பொறுமையையும் சோதித்து பார்க்கும் விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுவது என்னவெனில், இனியும் எம்மை சீண்டிப்பார்த்தால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் இந்தியாவிற்கு செல்ல தயாராக வேண்டும் என்பதேயாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
Read more

mahinda-body-guardஇலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரதானியாக செயற்பட்ட மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பில் உரிய தகவல்களை வழங்கவில்லை எனக் கோரியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மீண்டும் அடுத்த வருடம் ஜனவரி 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

yosithaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நிதி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்குத் தொடர்பில் தற்போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், வைத்திய பரிசோதனைகளுக்காக யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக அண்மமையில் அனுமதி கோரியிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இதற்கான அனுமதியை இன்றையதினம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

raviநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சில பௌத்த பிக்குகள் தாக்கல் செய்த மனுவொன்று தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ம் திகதி குறித்த நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மதுபான இறக்குமதி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.