முல்லைத்தீவு மாந்தைக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 கிராம சேவகர் பிரிவில் 2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர் மீளவும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கிழக்கிலுள்ள பிராந்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இந்தப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
1,570 புது வீடுகள் கட்டப்பட்டதோடு, மேலும் 914 வீடுகள் கட்டியெழுப்பப்படவுள்ளன. இதைவிட, 455 வீடுகள் பகுதிப் புனரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 2334 வீடுகளுக்கு மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.