Header image alt text

dsc04912முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சின்னச்சாலம்பன் ஈஸ்வரன் வித்தியாலயத்தின் வேலி அமைப்பிற்கென வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதன்படி மேற்படி வேலியினை அமைப்பதற்காக திரு. கந்தையா சிவநேசன் அவர்கள் தனது வட மாகாணசபை உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். Read more

sss-2பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு பயிற்சிக் கப்பல்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு நேற்று வருகை தந்துள்ளன.“சோமுத்ரா அவிஜன்” மற்றும் “சோமுத்ரா ஜோய்” என்ற இரண்டு கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்துள்ளன.

குறித்த கப்பல்கள் 6 நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளதுடன், இதில் 511 கடற்படை வீரர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள வுள்ளதுடன், கலாசார நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளவுள்ளனர்.

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் உள்ளிட்ட எழுவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காவே அவர்கள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட எழுவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Ananthiவடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் இன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவியான அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் என கூறப்படுபவர்கள் தொடர்பில் பொய்யான ஆவணம் ஒன்றை அரச சட்டத்தரணியும், இராணுவத்தினரும் அடுத்த தவணைக்குக் கொண்டு வருவார்கள் என்றார். Read more

sssதங்களுக்கான சம்பள உயர்வை உடன் வழங்குமாறு வலியுறுத்தி மலையகத்தின் பல பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் இன்றும் ஒப்பாரியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஹட்டன் பிரதேச தொழிலாளர்கள் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதி மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கொட்டகலை, பத்தனை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 42 தோட்டங்களில் வசித்துவரும் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் கொட்டகலை நகரத்தில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

udayangaரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

முன்னதாக மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். ஆகையால் வெளிநாட்டில் தங்கியிருக்கு அவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் மூலம் பிடியாணை பிறப்பிக்க வேண்டும் எனவும், அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். Read more

poduயாழ்ப்பாணத்தில் கடந்த 24ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது பலசேனா வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றை நடாத்தியுள்ளது.

இந்த எதிர்ப்பு கண்டனப் பேரணி இன்றுகாலை 9.30மணிளளவில் வவுனியா மாமடு சந்தியில் இருந்து ஆரம்பமாகி வவுனியா நகர் வரை இடம்பெற்றுள்ளது. இந்தப் பேரணியில் சுமார் 150 பேர் வரை கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் இந்த கண்டனப் பேரணிக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், வவுனியாவைச் சேர்ந்த எவரும் இதில் கலந்து கொள்ளவில்லையென்றும், வெளி இடங்களிலிருந்து மூன்று பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பொது பலசேனா அமைப்பின் ஆதரவாளர்களே இதில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

bavanகடந்த 21ம் திகதி மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள வடக்கு மக்களின் பிரதிநிதிகள் சபை, அந்த மூன்றாண்டு காலத்தினை பயனுள்ள விதத்தில் கடந்துள்ளதா என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவரினதும் மனங்களில் எழுந்து நிற்கிறது.
யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, இன்றும் வறுமைநிலையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாகாண சபையின் செயற்பாடுகளை பயனுள்ள விதத்தில் உணர்ந்துகொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். 

Read more