ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
முன்னதாக மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். ஆகையால் வெளிநாட்டில் தங்கியிருக்கு அவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் மூலம் பிடியாணை பிறப்பிக்க வேண்டும் எனவும், அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எதுஎவ்வாறு இருப்பினும் உதயங்க வீரதுங்க இதுவரை சந்தேகநபராக பெயரிடப்படவில்லை என சுட்டிக்காட்டிய கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.