முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சின்னச்சாலம்பன் ஈஸ்வரன் வித்தியாலயத்தின் வேலி அமைப்பிற்கென வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதன்படி மேற்படி வேலியினை அமைப்பதற்காக திரு. கந்தையா சிவநேசன் அவர்கள் தனது வட மாகாணசபை உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.