Header image alt text

siddharthanதமிழ் மக்களுடைய உடனடி அடிப்படைப் பிரச்சினைகளான காணி விடுப்பு, அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணாமல் போனோர் சம்பந்தமான விடயம், வேலை வாய்ப்பு, வாழ்வாதார விடயம் போன்றவற்றுக்கே தீர்வை வழங்க முடியாது திண்டாடும் இந்த அரசாங்கம் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கப் போகிறது என்ற கேள்வி இன்று பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இருந்தாலும் கூட இன்று இலங்கை அரசியல் மேடையில் சில நகர்வுகள் நடைபெறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் கூட்டமைப்பினுடைய நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.     அவர் மேலும் தெரிவிக்கையில்…. Read more

dgfயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில் அதற்கு நீதி கோரி மாணவர்கள் மேற்கொண்டு வந்த எதிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான இன்றைய கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்றுகாலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். Read more

c-14iyanaar03

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் அவர்களின் தலைமையில், தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு வி.யோகநாதன் முன்னிலையில் 29.10.2016 சனிக்கிழமை கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Read more

uyiuiமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கெட்டாஞ்சேனை பகுதியில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முறக்கெட்டாஞ்சேனை பிரதான வீதியை அண்மித்த மக்கள் குடியிருப்பு மற்றும் பாடசாலை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் முறக்கெட்டாஞ்சேனை இராணுவ முகாமின் சில பகுதிகள் மக்கள் தேவைக்காக கடந்த 2014ம் ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தன. Read more

australiaபடகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடக்கம் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Read more

img_9746

iyanaar03வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் 29.10.2016 அன்று காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. 
இவ் இன்றைய நிகழ்வுகளில் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் முழுமையான முயற்சியில் திருநாவற்குளம் இளைஞர் கழக இளைஞர்களின் பங்களிப்புடனும் இவ் சமூக பணி முன்னெடுக்கப்பட்டது. 
வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இவ் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

Read more

sampanthanஇருளான காலத்தில் இருந்து வெளிச்சமான காலத்தை நொக்கி நாம் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

எனினும் தாம் வெளிச்சத்தை முழுமையாக அடைந்து விட்டதாக கூறமாட்டேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

maithri-and-ranilஉலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் தீபத்திருநாள் அனைவருக்கும் புத்தொளி வீசும் தீபத் திருநாளாக அமைய வாழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் சுபீட்சம் அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சகவாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும் சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனை என்றும் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். Read more

iyanaar03வவுனியா தாண்டிக்குளத்தில் மாபெரும் இரத்ததான முகாமும், தீபாவளி சிறப்பு நிகழ்வுகளும்.
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் தீபாவளி திருநாள் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
அந்த வகையில் முதல் நிகழ்வாக காலை 08.30 மணிக்கு இளைஞர்களின் ஒண்றிணைவில் வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் அவசியத்தை உணர்ந்து மாபெரும் இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் 09.30 மணிமுதல் ஆரம்பமாவதுடன். மாலை நிகழ்வுகள் 02.00 மணிக்கு ஆரம்பமாகும்.

மேலும் அமைப்பிதழ், நிகழ்சிநிரலைப் பார்க்க Read more

solothun01சுவிட்சர்லாந்தின் சொலத்தூன் மாநிலத்தில் வசித்து வந்த இரு இலங்கைத் தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு காரணமாகும்.

சொலத்தூன் மாநிலத்தின் ரயில் நிலையத்தின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள கடை அருகே, 25.10.2016 செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் தொழில் ரீதியாக (விழாக்களுக்கு வீடியோ எடுத்தல்) நண்பர்களாக இருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட வவுனியா குருமன்காட்டை சேர்ந்த 29 வயதுடைய கார்த்திக் பாலேந்தின் என்ற இளைஞர் ஆபத்தான நிலையில் பொலிசாரால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாள் மதியம் இறந்துள்ளார். Read more