newzealandநியூசிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கு தீர்மானிக்கவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இன்று நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்போதே நியூசிலாந்து பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் ஒன்று அமைக்கப்படுவதை தாம் வரவேற்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்டகால யுத்தத்தின் பின்னர் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நியூசிலாந்து தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.